சீனாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நேபாள பிரதமர்! – முதல் பயணமாக இந்தியா வர திட்டம்!

நம் அண்டை நாடான நேபாளம், நமக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், அந்த நாட்டில் நம்முடைய ஆதிக்கம் இருக்கவேண்டும். இதை தவிர்த்து சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அங்கு ஆதிக்கம் செலுத்த முற்பட்டால், அது இந்தியாவுக்கு பல்வேறு விவகாரங்களில் பிரச்சனைகளை உண்டு பண்ணும். இதனை கருத்தில் கொண்டே, இந்தியா நேபாள விஷயத்தில் எப்போதுமே கழுகுப் பார்வையை செலுத்துவதுடன், அங்கு இந்தியாவுக்கு எதிராக சீனா போன்ற நாடுகள் காய்களை நகர்த்தினால், அவற்றை முளையிலேயே கிள்ளி எறியும் வேலைகளையும் கண கச்சிதமாக செய்து வருகின்றன.

இந்த நிலையில்தான், நேபாளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும், நேபாள காங்கிரஸ் கூட்டணியும் இணைந்து நேபாளத்தில் ஆட்சியமைத்துள்ளன. இந்தக் கூட்டணி சார்பில் நேபாள நாட்டின் பிரதமராக புஷ்ப கமல் பிரசண்டா, கடந்த டிசம்பர், 26-ல் மூன்றாவது முறையாக பதவியேற்றார்.

இந்த நிலையில் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையிலான அரசின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இதில் பிரசண்டா தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

இதையடுத்து பிரதமர் பிரசண்டா, செய்தியாளர்களிடம் கூறுகையில், ’இந்தியாவிற்கு விரைவில் அரசு முறை பயணமாக செல்ல உள்ளேன். எனினும், அதற்கான பயண திட்டமிடல்கள் இறுதியாகவில்லை. இருநாட்டு தூதரக அதிகாரிகளும் ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளனர்’ எனத் தெரிவித்து இருக்கிறார்.

அதாவது பிரதமர் பிரசண்டா, பதவியேற்ற பிறகு, முதல் பயணமாக, இந்தியாவுக்கு வருகை தர இருக்க கூடிய நிகழ்வு, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் மாற்றமில்லை. அதேவேளையில் இந்திய-நேபாள உறவு நல்ல நிலையில் சென்றுகொண்டு இருக்கிறது என்பதை உணர்த்துவதாகவும் தெரிகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்