சின்னத்திரையின் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் தமிழ் திரையுலகில் விஜய் நடித்த ‘மாண்புமிகு மாணவன்‘ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால் அவர் நடித்த எந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தார். இவர் நடித்த முதல் சீரியலான ‘தென்றல்‘ தொடரிலேயே அதிகமான ரசிகர்களை கவர்ந்து பிரபலமடைந்தார்.
இவர் தற்போது வரை சீரியல்களில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். இவர் 40 வயதாகியும் இளமை ததும்பும் அழகுடன் ஹீரோயினாக நடித்து வரும் ஸ்ருதி ராஜ் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
இதுகுறித்து அடிக்கடி பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அதற்கு பதிலளித்துள்ளார். அதில், “ திருமணம் குறித்து இதுவரை எதையும் யோசிக்கவில்லை. எனது திருமணம் பற்றி என் பெற்றோர்கள் பார்த்து கொள்வார்கள்“ என்று கூறியுள்ளார்.










