நேரம், பிரேமம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். ‘நேரம்‘ படத்தை தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் ‘பிரேமம்‘ என்ற படம் வெளியானது. அந்த படம் அவருக்கு சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘பாட்டு‘ என்ற படத்தை அறிவித்தார். ஆனால் அந்தப் படத்தை தள்ளி வைத்துவிட்டு தற்போது ‘கோல்ட்‘ படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.
கோல்ட் படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. இதனால் விரக்தி அடைந்த சினிமா ரசிகர்கள் தொடர்ச்சியாக அல்போன்ஸ் புத்ரன் மீது எதிர்மறையான விமர்சனங்கள் செய்து வருகின்றனர். இந்த விமர்சனங்களால் மனவேதனை அடைந்துள்ள அல்போன்ஸ், ‘ முகநூலில் என் படத்தை தொடர்ச்சியாக விமர்சிக்கிறீர்கள். என்னை கேலி செய்ய யாருக்கும் உரிமையில்லை. இந்தியாவில் நடிகர் கமலஹாசனுக்கு மட்டுமே என் படத்தை விமர்சிக்க தகுதி உண்டு“ என்று கூறியுள்ளார்.










