சிறந்த அறிமுக நடிகர் விருதை வென்ற பிரதீப் ரங்கநாதன்

திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் சென்னையை சேர்ந்தவராவார். இவர் முதலில் ‘கோமாளி‘ படத்தை இயக்கினார், அதில் ஜெயம் ரவி மற்றும் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தனர். இதையடுத்து அவர் எடுத்த படம் ‘லவ் டுடே‘. இப்படத்தை இவரே இயக்கி, ஹீரோவாகவும் நடித்து இருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன். மேலும் பல் திரைப்பிரபலங்கள்  இவரை அழைத்து பாராட்டினர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் இவரை தனது வீட்டிற்கே அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

இந்நிலையில் தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற லவ் டூடே படம்,  தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்துள்ளது. இந்தச்சூழலில், ஹைதரபாத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதனுக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிரஞ்சீவி அவருக்கு வழங்கி கவுரவித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் ‘மொரட்டு சிங்கிள்‘ என்ற யூடியுப் சேனலையும் நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்