உலக அரங்கில் வேகமெடுத்து பாயும் இந்தியா!

யுபி.ஐ (Unified Payments Interface – UPI) மூலம் நடக்கும் பணப்பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பொருளை வாங்க வெளியில் செல்லும்போது, பலரும் பர்ஸை எடுத்துச் செல்லாமல் மொபைலை மட்டும் எடுத்துச் செல்கின்றனர். என்ன பொருள் வாங்கினாலும் கூகுள் பே, போன் பே, பாரத் பே, பே டிஎம் ஆகிய செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர்.

எந்தவிதமான சிரமங்களும் இல்லாமல், எளிதாக பணம் பெறுவதற்கு, செலுத்துவதற்கு இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்திய யு.பி.ஐ. முறை வெற்றிகரமான பணபரிவர்த்தனை சேவை அமைப்பாக, நாளுக்கு நாள் வேகமெடுத்துச் சென்றுகொண்டிருக்கின்றன.

இதனை என்.பி.சி. என்கிற தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பு தீவிரமாக கண்காணித்து, நடைமுறைப்படுத்தி வருகின்றது. பல்வேறு வங்கி கணக்குகளை ஒரே செயலி மூலம் பரிவர்த்தனைக்கு பயன்படுத்த முடியும் என்பதால், இந்த திட்டம் இன்றைய தலைமுறையினரிடம் வெற்றிகரமாகச் சென்று, பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இந்த யு.பி.ஐ. பணவரித்தனை முறையை பல்வேறு உலக நாடுகளிலும் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இந்தியா வேகமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் தான் இந்த யு.பி.ஐ. பண பரிவர்த்தனை முறைத் திட்டம் இந்தியா – சிங்கப்பூர் இடையே துவக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (21-பிப்ரவரி) வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைக்கிறார். இதில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பாங்கேற்கிறார். இது இந்தியா உலக அரங்கில் எந்த அளவுக்கு வேகமெடுத்துச் செயல்படுகிறது என்பதை உணர்த்துவதாகவும் இருக்கிறது.

 

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்