தமிழக அரசியலில், உதயநிதி ஸ்டாலினை, அவசரமாக அமைச்சராக்கியது ஏன் என அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், எடப்பாடி பழனிசாமியை, முதலமைச்சராக சசிகலா அறிவித்தார். ஆனால் சில மாதங்களில், அதிமுகவில் இருந்த சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் ஓரம் கட்டப்பட்டனர். தொடர்ந்து டிடிவி.தினகரன், அமமுக என்ற புதிய கட்சியை தொடங்கினார். தொடர்ந்து ஆர்கே நகர் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதற்கிடையில், பாஜக மற்றும் அதிமுக இடையே கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி என இரு அணிகள் இருப்பதால், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவுக்கு யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய அதிமுகவை மீண்டும் ஒரே அணியாக மாற்ற பாஜக தலைவர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கூறியதாவது.
நேற்று காலை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பெதவியேற்று கொண்டார். ஏன் இந்த திடீர் பதவியேற்பு விழா நடந்தது என புரியவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அறிவித்தது ஏன் என்று தெரியவில்லை. இது அனைவரின் மனதிலும் கேள்வியாக எழுந்துள்ளது.
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில், அமமுகவின் தேர்தல் கூட்டணி குறித்து 2023 நவம்பர், டிசம்பர் மாதங்களில் அறிவிப்போதும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பல தரப்பினரும் கூறி வருகிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் நினைத்து இருந்தால், ஏற்கனவே அதை செய்து இருக்கலாம். அதிமுகவை இணைய செய்ய அவர்களால்தான் முடியும் என்றார்.










