இணையத்தை கலக்கும் ‘டெஸ்ட்‘ படக்குழு வெளியிட்ட புகைப்படம்

தயாரிப்பாளரான சஷிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டெஸ்ட்‘. இவர் ‘தமிழ்ப்படம், இறுதிச்சுற்று, தமிழ்ப்படம்-2, ஏலே, மண்டேலா, ஜகமே தந்திரம். விக்ரம் வேதா‘ என பல படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவரின் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் படம் ‘டெஸ்ட்‘.

இப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், லாஸ்யா நாகராஜ் என பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இதில் நடிகை மீரா ஜாஸ்மின் நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்