இயக்குநர் ராஜமௌலிக்கு ‘ஐஸ்’ வைத்த பிரபல ஹீரோ !

 

‘பாகுபலி’திரைப்படத்துக்காக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு. இரண்டு விருதுகள் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து நடிகர் பிரபாஸ், இயக்குநர் ராஜமெளலியை புகழ்ந்து தள்ளி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.ல்

‘பாகுபலி’திரைப்படத்தின் மூலம்  இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி முன்னணி நட்சத்திரமான நடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர்நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் மூலம் திரையில் ஒரு பிரம்மாண்டத்தை காட்டிய இயக்குநர் ராஜமெளலியின் புகழ் இந்திய திரை உலகம் முழுவதும் பரவியது. பின்னர் அவர்,‘ஆர் ஆர் ஆர்’படத்தை இயக்கினார்.

இந்தநிலையில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு, நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதும், சிறந்த இயக்குநருக்கான லா பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதும் கிடைத்திருக்கிறது. அதேபோல ‘பாகுபலி’படத்துக்காக, சிறந்த இசையமைப்பாலருக்கான விருது கீரவாணிக்கு கிடைத்திருக்கிறது. இந்திய அளவில் ரசிகர்களால்  மிகவும் விரும்பப்பட்ட ‘டாப் 10’படங்களில் ‘பாகுபலி’யும் இடம் பெற்றிருக்கிறது. இதற்காக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலை ஆர்மேக்ஸ் ஊடகம் அறிவித்திருக்கிறது.

இதையடுத்து, விருது பெற்றுள்ள இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கும், இசையமைப்பாளர் கீரவாணிக்கும்,‘பாகுபலி’படத்தின் நாயகன் பிரபாஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.‘இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குனருக்கான நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குனருக்கான லா பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதை வென்றதுக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கும், இசையமைப்பாளர் கீரவாணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்’என, ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்