ஐநா தலைமையகத்துக்கு இந்தியா கொடுத்த 2வது பரிசு

ஐநா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலையை இந்தியா வழங்கியது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை, அந்தக் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்பது வழக்கம். இதன் தொடா்ச்சியாக டிசம்பா் மாதத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதை தொடர்ந்து, ஐநா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலை இன்று திறக்கப்பட்டது.

2 சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோர் இணைந்து, இன்று மகாத்மா காந்தி சிலையை சிலையை திறந்து வைத்தனர். இந்திய அரசு பரிசாக வழங்கிய இந்த சிலையை, புகழ்பெற்ற இந்திய சிற்பியும், ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற ராம் சுதாா் வடிவமைத்தர். சிலை திறப்பு விழாவில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கடந்த 1982 ஜூலை 26ம் தேதி இந்தியா சாா்பில் ஐநாவுக்கு சூா்ய பகவான் சிலை பரிசாக அளிக்கப்பட்டது. அது பாலப் பேரரசு கால 11ம் நூற்றாண்டு கருங்கல் சிலையாகும். அதனை முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பரிசாக அளித்தாா். அந்த சிலை ஐநா மாநாட்டு கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைதான் ஐ.நா.வுக்கு இந்தியா அளித்த முதல் பரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐநாவில் திறக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலை இந்தியாவின் 2வது பரிசாகும். அந்த சிலை திறக்கப்பட்டுள்ள ஐ.நா. தலைமையக புல்வெளிப் பகுதியில் 1961 முதல் 1989ம் ஆண்டு வரை ஜொ்மனியை பிரித்த பொ்லின் சுவர் பகுதிகள், தென் ஆப்பிரிக்கா பரிசாக அளித்த நெல்சன் மண்டேலா சிலை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்