கேன்ஸ் திரைப்பட திருவிழாவை கடுமையாக விமர்சித்து வரும் நடிகை நந்திதா தாஸ்

பிரான்சில் 2023-ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பாலிவுட்டில் மட்டுமில்லாமல் தென்னிந்தியாவிலிருந்தும் பிரபல நடிகைகள் சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே இந்த விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராயின் ஆடை அலங்காரம் குஷ்புவின் பாரம்பரிய பட்டுப்புடவை குறித்த விஷயங்கள் சோஷியல் மீடியாவில் கேன்ஸ் திரைப்பட திருவிழா குறித்த பரபரப்பாக பேச வைத்தன.

அதே சமயம் ‘அழகி‘ புகழ் நடிகை நந்திதா தாஸ் நடிகைகளின் இந்த ஆடை அலங்காரம் குறித்த கூறும்போது, “ இந்த வருடம் என்னால் கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் கலந்து கொள்ள இயலவில்லை.

ஆனால் அங்கே நடப்பது திரைப்பட திருவிழா தானே தவிர ஆடை அலங்கார திருவிழா அல்ல என்பதை இங்கிருந்து செல்லும் நடிகைகள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதேசமயம் ஒரே ஒருவர் மட்டும் இந்த விழாவில் புடவை அணிந்து கொண்டு கலந்து கொண்டதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது“ என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்