ஆடம்பர பயணத்துக்கு மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் – பிரமிக்க வைக்கும் கட்டணம்

இந்தியன் ரயில்வே துறை சார்பில், சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. அதில், ஒரு வாரம் பயணம் செய்வதற்கு ரூ.19 லட்சம் மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த தொகையையும் செலுத்தி பயணம் செய்த ஒரு வாலிபர், அவரது பயண அனுபவத்தை வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் பஸ், ரயில்களை மட்டுமே தூர பயணத்துக்கு மக்கள் பயன்படுத்தினர். குறைந்த கிலோ மீட்டர் தூரங்களுக்கு மாட்டு வண்டிகளை பூட்டி செல்வார்கள். பின்னர் பல்வேறு வாகனங்கள் வரத் தொடங்கியதால் சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ, டாக்சி என வந்தது. இதனால், மக்களும் மாற்றத்தை நோக்கி சென்றனர்.

ஆனால் தற்போதைய சூழலில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும், குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக ரயிலில் சென்று வருகின்றனர். இதனால் பஸ், ஆட்டோ, டாக்சிக்கு கொடுக்கும் பணத்தில் சுமார் 70 சதவீதம் சேமிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் இந்தியன் ரயில்வே சார்பில் சுற்றுலா ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக ஷீரடி சாய்பாபா, காசி உள்பட பல புனித ஸ்தலங்களுக்கு செல்ல குறைந்த கட்டணத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனை சுற்றுலாவாகவும் சிலர் பயன்படுத்தி ரயிலில் சென்று மகிழ்ச்சியடைகின்றனர்.

இந்நிலையில், இந்தியன் ரயில்வே துறை சர்பில் மகராஜா எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க விரும்புவோர், ஏதேனும் 4 வழித்தடங்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் டிக்கெட் விலை ரூ.100, ரூ.1000 இல்லை. ஜஸ்ட் பல லட்சம் மட்டுமே செலவாகும் என தெரிகிறது.

இந்த ரயில் பயணம் விமான போக்குவரத்துக்கு குறைவாக நாங்களும் டிக்கெட் கட்டணம் வாங்க மாட்டோம் என இந்திய ரயில்வே நிர்வாகமும் மல்லுக்கு நிற்கும் கதையாக உள்ளது.

குறிப்பாக இந்த ரயிலில் ஒருவருக்கு ரூ.19 லட்சம் மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ரயிலில் ரூ.19 லட்சம் கொடுத்து பயணம் செய்த குஷாக்ரா என்ற வாலிபர், அதனை விடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்து, இதுபோன்ற ஒரு ஆடம்பர பயணத்தை அனுபவித்ததுண்டா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து பலரும் வாயை பிளந்து நிற்கின்றனர். சிலர், அந்த பணத்தில் சிறிதாக வீட்டை வாங்கினாலும் வாழ்நாள் முழுவதும் வாழலாம் என்றும், அந்த பணத்தை வைத்து உலகை சுற்றி வந்து இருக்கலாம் என்றும், ஏதாவது தொழிலில் முதலீடு செய்தால், அடுத்த தலைமுறைக்கு எதிர் காலத்தை கொடுக்கலாம் என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்