தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா ‘பொன்னியின் செல்வன்‘ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘தி ரோட்‘ என்ற படத்தில் நடிக்கிறார்.
இதில் இவருடன் இணைந்து சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை அருண் வசீகரன் இயக்குகிறார்.
இந்நிலையில் இப்படம் பற்றி அவர் கூறும்போது, “ மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து படம் உருவாகி உள்ளது“ என்றார்.
இந்த படத்தை அதிக பொருட்செலவில் எடுத்துள்ளனர். இப்படத்தின் டீசர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்துக்காக திரிஷா மற்றும் படக்குழுவினர் மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள மலைகள், காடுகள் என்று கடுமையான இடங்களுக்கு சென்று படப்பிடிப்பில் பங்கேற்று உள்ளனர்.
இப்படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.










