பான் இந்தியா ஸ்டாராக முயற்சிக்கிறாரா சித்தார்த்? பல மொழிகளில் வெளியாகும் ‘சித்தா‘ திரைப்படம்

நடிகர் சித்தார்த் தற்போது ‘சித்தா‘ என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எஸ்.யு.அருண்குமார் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி‘ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இப்படத்தை ‘காதலில் சொதப்புவது எப்படி?, ஜில் ஜங் ஜக்‘ ஆகிய படங்களை எடுத்த எடக்கி எண்டர்டெயின்மெண்ட்  4-வது படைப்பாக ‘சித்தா‘ படத்தை தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த படத்தை இதன் தயாரிப்பு நிறுவனம் பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்