’அயோத்தி’ படம் வெளிவந்த பின், எங்களை பாராட்டிய முதல் நடிகர் அவர்தான்!

இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால்  சில ஆண்டுகளாக நடிகர் சசிகுமார் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தார். இந்நிலையில் இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசி நடித்து வெளியான படம் ‘அயோத்தி‘. இப்படம் நல்ல வரவேற்பையும், ரசிகர்களின் பாராட்டையும் பெற்று தந்துள்ளது. இப்படம் கடந்த சில ஆண்டுகளாக தோல்வியில் இருந்த சசிகுமாரரை மீட்டு எடுத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் 50-வது நாள் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த விழாவில் கலந்துகொண்ட சசிகுமார் கூறியதாவது, “என் முதல் படம் வெளிவந்த போது என்னை தொடர்பு கொண்டு பாராட்டிய முதல் நபர் நடிகர் சிம்பு தான். அதேபோல், ‘அயோத்தி‘ படம் வெளிவந்த போது இந்த படத்தின் இயக்குனர் மந்திர மூர்த்தியை தொடர்பு கொண்டு பாராட்டிய முதல் நபர் சிம்பு தான் என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் சசிகுமார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்