தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தற்போது இவர் ஹிந்தியில் ஷாருக்கான் உடன் ‘ஜவான்‘ படத்தில் நடித்து வருகிறார். இதுவரை தமிழில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா,தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். ஆனால் கமல்ஹாசன் உடன் இணைந்து இன்னும் ஒரு படம் கூட நடிக்கவில்லை. இந்நிலையில் ‘இந்தியன் 2‘ படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கமல் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் திரிஷா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தற்போது திரிஷாவிற்கு பதிலாக நயன்தாராவை நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டால் முதன்முறையாக கமல் உடன் அவர் இணையும் படம் இதுவாக இருக்கும்.










