‘டாடா‘ பட இயக்குனரோடு கைக்கோர்க்கும் துருவ் விக்ரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆவார். இவர் ‘ஆதித்யா வர்மா‘ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து ‘மகான்‘ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இதில் கபடி வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இதையடுத்து தற்போது ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் துருவ் விக்ரம். அதன்படி, டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மாரி செல்வராஜ் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தில் நடிப்பார் என்றும், மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்