அருள்நிதி குறித்து ரகசியம் சொன்ன நடிகை துஷாரா விஜயன்

நடிகை துஷாரா விஜயன் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை‘ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவார். இவருக்கு இப்படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்துள்ள நிலையில், பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அருள் நிதியுடன் இணைந்து ‘கழுவேத்தி மூர்க்கன்‘ என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேற்று(மே.26) வெளியான நிலையில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது பற்றி துஷாரா விஜயன் கூறியதாவது, “ எனது படங்கள் தேர்வு குறித்து எப்போதும் நான் கவனமாக இருப்பேன். அதில் என்னுடைய கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும்.

இப்படத்தில் ‘கவிதா‘ என் மனதிற்கு நெருக்கமாக நான் உணர்ந்த அப்படிப்பட்ட ஒரு கேரக்டர். திண்டுக்கல்லில் உள்ள ஒரு வழக்கமான கிராமத்து பெண். நான் அதே பின்னணியில் இருந்து வந்ததால், இந்த கேரக்டரை செய்வது எளிதாக இருந்தது. அவள் அப்பாவித்தனம் கொண்ட ஒரு பெண். இந்தத் திரைப்படத்திற்குப் பிறகும் பார்வையாளர்கள் அவளை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அருள்நிதி படங்களில் காதல் காட்சிகள் பெரிதாக இருக்காது.

ஆனால், இந்த படத்தில் எனக்கும் அருள்நிதிக்கும் இடையில் சில அழகான  காதல் காட்சிகளை இயக்குனர் கவுதம் ராஜ் கொடுத்துள்ளார்“ என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்