நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2‘ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் தனது 234- வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
இவருக்கு சொந்தமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தில் இவர் நடிக்கும் படங்களை மட்டும் தயாரித்து வந்த நிலையில் தற்போது இளம் கதாநாயகர்களின் படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.
அந்த வரிசையில் முதலில் சிம்பு படத்தை தயாரிக்க போவதாக தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் தயாரிக்கப்போவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ‘ஜெயிலர்‘ படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கும் அந்த படத்தையும் கமல்ஹாசன் தயாரிக்க உள்ளார்.
மேலும் தனுஷ் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்‘ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.










