‘லியோ‘ படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு புதிய அப்டேட்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன் என பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றன.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிவடைந்த நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் மற்றும் சஞ்சய் தத் சம்பந்தப்பட்ட காட்சிகள் காஷ்மீர் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ‘லியோ‘ படம் குறித்த ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, லியோ படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கதைப்படி விஜய்யின் தந்தையாக நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் விஜய் , சஞ்சய் தத் இருவருமே இந்த படத்தில் கேங்க்ஸ்டார் வேடத்தில் நடிக்கிறார்கள்.

அதோடு விஜய், சஞ்சய் தத் இருவரும் நடித்துள்ள காட்சிகளை மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாகவும், மிரட்டலாகவும் படமாக்கி உள்ளாராம் லோகேஷ் கனகராஜ். இந்த தகவல் ரசிகர்களுக்கு இடையே இப்படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்