நடிகை பாவனா தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் சில வருடங்களாக எந்தவொரு படத்திலும் நடிக்காமல் இருந்தார்.
அதன்பின் அந்த சோகத்தில் இருந்து மீண்டு, மறுபடியும் படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவர் தற்போது கன்னடத்தில் ‘பிங்க் நோட், கேஸ் ஆப் கொன்டனா‘ என்ற இரு படத்திலும் மற்றும் ‘ஹன்ட்‘ என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரகுமானுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது கொச்சியில் தொடங்கியுள்ளது.
இதில் ரகுமான் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும், பாவனா தடயவியல் மருத்துவர் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஒரு க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இப்படத்தை புதுமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்குகிறார்.
மேலும் அதித் பிரசன்ன குமார் தயாரித்து வரும் நிலையில், இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.










