தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த படம் ‘லவ் டுடே‘. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூலிலும் சாதனைப் படைத்தது. இப்படம் பிரதீப் ரங்கநாதன் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இதில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை இவானா வாழ்க்கையிலும் இப்படம் ஒரு பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. இதில் நடிகர் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் அவர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருந்தது.
இந்நிலையில், இப்படம் தமிழில் சாதனைப் படைத்ததை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர்.
இப்படத்தை அத்வைத் சந்தன் ஹிந்தியில் இயக்குகிறார். மேலும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிக்கிறார்.
இவனா நடித்த கேரக்டரில் போனி கபூரின் மகள் குஷி கபூர் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் நடித்த கதாபாத்திரத்தில் ஜுனைத் கான் நடிக்கிறார்.
இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான் என்பவருடைய மகன் ஆவார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.










