நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் ‘ஜெயிலர்‘. இப்படத்தில் அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்திற்கு அவரிடம் இயக்குனர்கள் கதை சொல்லி வருகின்றனர். சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஞானவேல் உள்ளிட்ட பலர் கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் ‘ஜெய்பீம்‘ படத்தை இயக்கிய ஞானவேல் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ரஜினி அடுத்தப்படியாக ஞானவேல் இயக்கத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி இருக்கிறது.










