தளபதி 67 படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்ற படக்குழு

நடிகர் விஜய் வாரிசு படத்திற்கு பிறகு ‘தளபதி 67‘ படத்தின் தகவல் எப்போது வெளிவரும் என அவருடைய ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 67‘ வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியாகியது. அதே வேகத்தில் இன்று(ஜன.31) காலை படக்குழுவினர் காஷ்மீர் படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் கிளம்பிச் சென்றுள்ளனர்.

படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரான ராம்குமார் இது பற்றிய அப்டேட்டை கொடுத்துள்ளார். காஷ்மீர் பயணிக்கும் விமான டிக்கெட்டின் போட்டோவைப் பகிர்ந்து, “தளபதி 67 படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளர் மற்றும் காஷ்மீர் செல்லும் குழுவினர் தளபதி விஜய் சார், இயக்குனர் லோகேஷ், தயாரிப்பாளர் லலித் சார், ஜெகதீஷ் மற்றும் மொத்த குழுவினருடன், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக…,“ என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்