தினமும் ஹெலிகாப்டரில் உலா வரும் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ‘கந்திகோட்டா‘ என்ற இடத்தில் நடந்து வருகிறது. கந்திகோட்டா என்பது திருப்பதியிலிருந்து 227 கி.மீ. தொலைவில் உள்ளது. பென்னாறு நதி பாயும் அழகிய பள்ளத்தாக்கு  அங்கு உள்ளது. மேலும் அந்த இடத்தைச் சுற்றி காடுகளும் இருப்பதால் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக உள்ளது. தினமும் காரில் பயணித்து அந்த இடத்திற்கு செல்ல முடியாது என்பதால் கமல்ஹாசன் சென்று வர ஹெலிகாப்டர் வசதி செய்து கொடுத்துள்ளார்களாம்.

இதனால் தினமும் ஹெலிகாப்டர் மூலம் கமல்ஹாசன் சென்று வருகிறாராம். இந்நிலையில் அவர் ஹெலிகாப்டரில் ஏறிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ‘இந்தியன் 2‘ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த வருடம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்