குஜராத்தில் கார் மீது சொகுசு பேருந்து மோதி விபத்து- 9 பேர் பலி

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து மீது கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் ஒன்பது பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நவ்சாரி மாவட்டம் வெஸ்மா கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து வல்சாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் இருந்து வந்த கார் மீது சொகுசு பேருந்து ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் ஒன்பது பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நவ்சாரி மாவட்டம் வெஸ்மா கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து வல்சாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் இருந்து வந்த கார் பேருந்து மீது மோதியதாக நவ்சாரி காவல் கண்காணிப்பாளர் ருஷிகேஷ் உபாத்யாய் தெரிவித்தார். காரில் பயணித்த ஒன்பது பேரில், சொகுசு பேருந்தின் ஓட்டுனருடன் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பயணம் செய்தவர்கள் அங்கிலேஷ்வர் பகுதியில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் வல்சாத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் என்றும், பேருந்தில் பயணம் செய்தவர்கள் வல்சாத்தை சேர்ந்தவர்கள் என்றும் உபாத்யாய் கூறினார். சாலை விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கார் மீது மோதியது தெரியவந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்