வைஷ்ணோ தேவி கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

ஜம்முவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ஜம்முவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி சன்னதியில் புத்தாண்டை முன்னிட்டு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கத்ராவின் திரிகோட்டா மலைகளில், இன்று பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

ஆண்டின் இறுதி தினமான இன்று எப்படியும் வைஷ்ணோ தேவியை தரித்துவிட வேண்டும் என்று பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் குவிந்தனர். குழந்தைகள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், புத்தாண்டை முன்னிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, மலை ஏறி இறங்கும் போது, ​​”ஜெய் மாதா தி” என்று கோஷமிட்டதைக் காண முடிந்தது.

 

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்