இந்தியக் கடற்படைக்காக அபிவிருத்தி செய்யப்பட்ட அடுத்த தலைமுறைக்கான 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் பணி தாமதம் ஆகும் என்று தெரிகிறது.
இந்தியக் கடற்படையில் தற்போது 16 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அபிவிருத்தி செய்யப்பட்ட, அடுத்த தலைமுறைக்கான அதி நவீன நீர்மூழ்கிகளைக் கட்ட பல ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி 6 நீர்மூழ்கிகள் மும்பை மஸ்கான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. ஆனால், தரமான தளவாடங்கள் உரிய காலத்தில் வந்து சேராததால், கட்டுமானப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இப்போதைய திட்டப்படி 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த நீர்மூழ்கிகள் கட்டுமானப் பணி முடிவடையும் என்று தெரிகிது. இப்போது இந்தியக் கடற்படை வசம் உள்ள நீர்மூழ்கிகள், அதிகபட்சமாக ஐந்து நாட்கள் கடலுக்கு அடியில் இருக்க முடியும். அதன்பின் எரிபொருளுக்காக கடல் மட்டத்திற்கு மேல் வர வேண்டியிருக்கிறது. ஆனால், இப்போது கட்டப்பட்டு வரும் நீர்மூழ்கிகள் அதிகபட்சமாக பத்து நாட்கள் வரை கடலுக்கு அடியில் இருக்க முடியும்.
1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் ஐ. என். எஸ். கல்வரி என்ற நீர்மூழ்கி ஆற்றிய உளவுப் பணி குறிப்பிடத்தக்கது. அது கடலுக்கு அடியில் இருந்து கொண்டு, எதிரிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணித்துக் கூறியது. அந்தப் போரில் வெற்றி பெற இந்த தகவல் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தியக் கடற்படையில் தற்போது 16 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அபிவிருத்தி செய்யப்பட்ட, அடுத்த தலைமுறைக்கான அதிநவீன போர்க் கருவிகளுடன் நீர்மூழ்கிகளைக் கட்ட பல ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி 6 நீர்மூழ்கிகள் மும்பை மஸகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி 31-ஆம் தேதியன்று இவை கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தரமான தளவாடங்கள் உரிய காலத்தில் வந்து சேராததால், கட்டுமானப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.










