தமிழ் சினிமா திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்திவாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் சீரியலில் காமிட்டாகி நடித்து வந்தார். அதன் பின் அவர் நடித்த சீரியல் மூலம் அனைவரின் உள்ளங்களை கவர்ந்து வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஆரம்பத்தில் இளம் நடிகர்களுடன் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது ஜெயம் ரவி, விஷால், சிம்பு, கமல்ஹாசன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்‘ படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், பத்து தல, யானை‘ என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவரின் நடிப்பில் ‘ருத்ரன்‘ பட வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று ‘பொம்மை‘ திரைப்படம் வெளியாகி உள்ளது. இதில் மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதுமட்டும் இல்லாமல் அவரின் கைவசம் தற்போது இந்தியன்-2 , டிமான்டி காலனி-2, ஜீப்ரா, அரண்மனை-4 மற்றும் விஷால் நடிக்கும் படம் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், “நான் ஏற்கனவே நடித்த ‘மான்ஸ்டர்‘ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், ‘பொம்மை‘ படத்தை இயக்கிய ராதா மோகன் ஆகியோர் என்னை மீண்டும் நடிக்க அழைத்தால் அவர்களிடத்தில் கதையே கேட்காமல் நடிக்க தயாராக இருக்கிறேன். அதே போல் வெற்றிமாறன் அழைத்தாலும் கதையே கேட்காமல் நடிப்பேன். அவர் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது“ என்று கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.










