மாரி செல்வராஜ்க்கு வாழ்த்து கூறிய இயக்குனர் பா.இரஞ்சித்

நடிகர் உதயநிதி நடிப்பில் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ‘மாமன்னன்‘. இப்படத்தை ‘பரியேறும் பெருமாள், கர்ணன்‘ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் நேற்று வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், ‘மாமன்னன்‘ படத்தின் டிரைலரை பாராட்டி இயக்குனர் பா.இரஞ்சித் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ உன் திரைமொழியின் வளமையும், கதையும், கதையின் மாந்தர்களும் உண்மையை கேட்ககூடியவர்களை சென்றடையட்டும்! சிறப்பான முன்னோட்டத்தை தந்த தம்பி மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!! “ என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்