‘லஸ்ட் ஸ்டோரிஸ்-2‘ படத்தின் டீசர் வெளியீடு

இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த ஆந்தாலஜி சீரியஸ் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்‘. இதில் ராதிகா ஆப்தே, மணிஷா கொய்ராலா, க்யாரா அத்வானி, புமி பட்னேகர், விக்கி கவுசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ‘லஸ்ட் ஸ்டோரிஸ்‘ இரண்டாம் பாகம் வருகின்ற ஜூன் 29-ம் தேதியன்று நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்த தொடரை அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென் சர்மா, ஆர்.பால்கி, சுஜோய் கோஷ் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த தொடரில் கஜோல், தமன்னா, விஜய் வர்மா, மிருணாள் தாக்கூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்