நடிகராக களமிறங்கும் பிரபல இயக்குனர்!

இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால் அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கத காரணத்தால் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கும் முதல் படமான இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இதில் புதுமுக நாயகன் ஷாம் செல்வன், நக்ஷா சரண் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘மார்கழி திங்கள்‘ என்னும் தலைப்பை வைத்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் வில்லன் கதாபாத்திரத்தில் முதன் முறையாக இயக்குனர் சுசீந்திரன் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் சுசீந்திரன் தனது வெண்ணிலா பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்