நடிகராக அவதாரம் எடுக்கும் பிரபல நடன இயக்குனர்

மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ‘நேரம், பிரேமம்‘ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘கோல்ட்‘ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அல்போன்ஸ் புத்திரன் அடுத்து நான் ஒரு தமிழ்ப் படம் இயக்கப்போகிறேன்.

இந்தப் படத்தை தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார் என்று அறிவித்தார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் நடிகர் விஜய் சேதுபதி உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடன இயக்குனரான சாண்டி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்