தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு திரையுலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே நடிகர் ஜெய்யை காதலிப்பதாக தகவல் வெளியானது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார். பின்னர் பிரபல இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பேசினர். இந்த தகவலில் உண்மை இல்லை என்று அஞ்சலி கண்டித்தார். தற்போது மீண்டும் திருமணம் பற்றிய செய்திகள் பரவி வருகிறது. அஞ்சலியின் பெற்றோர் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள அஞ்சலியும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இந்த தகவலுக்கு முன்பு போல் அஞ்சலி மறுப்பு சொல்லாமல் மௌனமாக இருப்பதால் உண்மையாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்ப தொடங்கியுள்ளனர். தற்போது ராம்சரணுடன் தெலுங்கு படத்தில் அஞ்சலி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.










