9 நகரங்களுக்கு ‘மாஸ்டர் பிளான்’ – தமிழக அரசு தீவிரம்

தமிழகத்தின் 9 நகரங்களின் முழுமை திட்டங்களில், நில வகைபாடு மாற்றத்துக்கான திருத்தங்களை, தமிழக அரசு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

நகர், ஊரமைப்பு துறையான, டிடிசிபி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், முறையான நில வகைப்பாடு அடங்கிய முழுமை திட்டங்கள் இல்லை. இதனால், தற்போது அமலில் உள்ள முழுமை திட்டங்களை, முறையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 2ம் நிலை நகரங்களின் முழுமை திட்டங்களை மறு ஆய்வு செய்து, புதுப்பிக்கும் பணிகளை, டிடிசிபி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், உரிமையாளர்கள் கோரிக்கை அடிப்படையில், முழுமை திட்டங்களில் நில வகைபாடு மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி, கடந்த 6 மாதங்களுக்கு மேல் தேங்கி இருந்த ஆவணங்களை, எடுத்த அதிகாரிகள், நில வகைபாட்டுக்கு மாற்றுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பழைய முழுமை திட்ட பிழைகள் காரணமாக, நில வகைபாடு மாற்றத்துக்கு, பொதுமக்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தனர். இதுபோல் பெறப்பட்ட விண்ணப்பங்கள், பல மாதங்களாக கிடந்தன. தற்போது, ஒரே நேரத்தில் கோவை, துாத்துக்குடி, ஓசூர், கரூர் ஆகிய மாவட்டங்களில், 9 இரண்டாம் நிலை நகரங்களில், 50 மேற்பட்ட நில வகைபாடு மாற்றங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால், இப்பகுதிகளில் புதிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்