கடையேழு வள்ளல்களின் வரிசையில் வந்த கடைசி வள்ளலாக உயிரோடு வாழ்ந்தபோது மட்டுமல்லாமல், மறைந்து பல ஆண்டுகளான நிலையிலும் லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் “புரட்சித்தலைவர்“ எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் இன்று.
இவர், ஜனவரி 17-ம் தேதி 1917-ம் ஆண்டு இலங்கையில் உள்ள கண்டி என்ற இடத்தில் பிறந்தார். இவர் அரசியல், சினிமா என்ற இரட்டை குதிரையில் சவாரி செய்து, இரண்டிலும் முழுமையான வெற்றி என்ற இலக்கை அடைந்தவர். இவர், சினிமா மற்றும் அரசியலில் இருந்தபோது மக்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை செய்துள்ளார். குறிப்பாக இவர் முதல்வராக இருந்த போது ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்தார். இதனால் மக்கள் இவரை அன்போடு மக்கள் திலகம், புரட்சிதலைவர், பொன்மனச் செம்மல், வாத்தியார், எம்.ஜி.ஆர் என பல்வேறு பெயர்களை சூட்டி அழைத்தனர்.
இவருக்கு நீரிழிவு நோயின் விளைவாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி மணப்பாக்கத்தில் உள்ள ராமாவரம் கார்டன்ஸ் இல்லத்தில் காலமானார். இவர் மரணத்திற்குப் பிறகு இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான ‘பாரத ரத்னா’ விருது இவருக்கு வழங்கப்பட்டது.










