100 நாளை கடந்த பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே‘

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான ‘லவ் டுடே‘ படம் பெரும் வரவேற்பை பெற்றது.  மேலும் 9 கோடியில் தயாரான இந்த படம் 80 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. செல்போனை மாற்றிக் கொள்வதால் காதல் ஜோடிகளுக்குள் வரும் பிரச்சினையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.  இப்படத்தை ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி‘ படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே நடித்தும் இருந்தார். இவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், ரவீனா ரவி, யோகி பாபு மற்றும் ராதிகா என பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த படம் பிப்ரவரி 11-ம் தேதி 100-வது நாளை தொட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான வில்லிவாக்கம் ஏஜிஎஸ் தியேட்டரிலும், அண்ணா நகர் பிவிஆர் தியேட்டரிலும் தொடர்ந்து 100 நாள் ஓடியிருக்கிறது. மேலும் தமிழ்நாடு முழுக்க இரண்டாவது ரவுண்ட் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்