நடிகர் விஷால் ‘செல்லமே‘ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவார். அதன்பின் பல வெற்றிப்படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். ‘சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை, துப்பறிவாளன்‘ என அவரது பாதையில் வெற்றி படங்கள் அதிகம். விஷால் பிலிம் பேக்டரி ஆரம்பித்து அதில் பல வெற்றி படங்களை தயாரித்தார். தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிக்கிறார்.
இந்நிலையில், தனது சினிமா கேரியர் எப்படி இருந்தாலும் தனது தாயாரின் பெயரில் நடத்தி வரும் அறக்கட்டளை மூலமாக பல்வேறு உதவிகளை செய்து விஷால் வருகிறார். அதோடு அடிக்கடி வித்தியாசமாக எதையாவது செய்து கவனிக்க வைக்கிறார். அந்தவகையில் தனது நெஞ்சில் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் முகத்தை பச்சை குத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.










