வில்லனாக களமிறங்கும் பிரபல சின்னத்திரை நடிகர்

சின்னத்திரையில் பிரபல நடிகரான தினேஷ் நீண்ட இடைவெளிக்கு பின் சீரியலில் வில்லனாக என்ட்ரி கொடுக்கிறார். நடிகை ராதிகா சரத்குமார் தயாரிப்பில் அதிக எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ‘கிழக்கு வாசல்‘ தொடரில் கேங்ஸ்டர் சிவா என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து நடிகர் தினேஷ் கூறியதாவது, “ கிழக்கு வாசல் சீரியலில் நீண்ட நாட்களுக்கு பிறகு நெகடிவ் ரோலில் நடிக்கிறேன். என்னுடைய இந்த புதிய பயணத்தை ரசிகர்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்“ என கூறியுள்ளார். இவர் ‘புதுக்கவிதை, பூவே பூச்சூடவா, நாச்சியார்புரம், ஈரமான ரோஜாவே 2‘ ஆகிய தொடர்களின் மூலம் ஏற்கனவே பிரபலமான தினேஷ், கிழக்கு வாசல் தொடரில் வில்லனாக என்ட்ரி கொடுப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்