மீண்டும் திரையில் வெளியாகும் எம்.எஸ்.தோனி திரைப்படம்

இந்திய இயக்குனர் நீரஜ் பாண்டே ‘எம்.எஸ்.தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி‘ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கி இருந்தார். இது இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20IPL கேப்டன் மகேந்திர சிங் தோனியின்  வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.

இத்திரைப்படத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் எம்.எஸ்.தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  மேலும் திஷா பதானி, கியாரா அத்வானி மற்றும் அனுபம் கெர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் தோனியின் சிறு வயது முதல் வாழ்க்கைச் சம்பவங்களின் மூலம் அவரது வாழ்க்கையை பதிவு செய்கிறது.

இப்படம் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இத்திரைப்படம் வருகிற மே 12-ம் தேதி மீண்டும் திரையிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது நடப்பு ஐபிஎல் சீசனில், தோனி எங்கு சென்றாலும் கிடைக்கிற அமோக வரவேற்பை கருத்தில் கொண்டு இப்படக்குழு இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்