விரைவில் படமாகும் பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை கதை

கிரிக்கெட் வீரர் கங்குலி 2000-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பேட்டிங்கில் வல்லவரான அவர் ஏராளமான சிக்சர், பவுண்டரிகள், சதங்கள் அடித்து கவனம் பெற்றார். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் இந்திய அணி 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக வெளியாகியுள்ளது. சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையையும் ஆவண படமாக எடுத்து வெளியிட்டனர். பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த  மிதாலி ராஜ் வாழ்க்கையும் படமானது.

இந்நிலையில் இதேபோல் கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கையும் படமாக எடுக்க கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கங்குலியும், “ எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க ஒப்புதல் அளித்துள்ளேன்“ என்றார். திரைக்கதை எழுதும் பணியை முடித்துள்ளனர். மேலும் இந்தப்படத்தில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக யூகமான தகவல்கள் பரவின.  தற்போது கங்குலியை நேரில் சென்று சந்தித்ததாகவும் எனவே அவர் நடிப்பது உறுதி என்றும் கூறப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் தரப்பில் நடிகர் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் கங்குலியாக நடிப்பது யார் என்பது அறிவிப்போம் என்று கூறியுள்ளனர். மேலும் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்