ஆட்குறைப்பை அறிவித்துள்ள எரிக்சன் நிறுவனம்!

தொலைத்தொடர்பு உதிரிப் பாகங்கள் உற்பத்திச் செய்யும் நிறுவனமான எரிக்சன் (ERICSSON) உலகம் முழுவதிலும் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 8,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக சம்மந்தப்பட்ட ஊழியர்களுக்கு எரிக்சன் நிறுவனம், மெமோ வழங்கியுள்ளது.

நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எரிக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள எரிக்சன் நிறுவனத்தில் சுமார் 1,05,000 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இது அந்நிறுவனத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஸ்வீடனில் 1,400 பேர் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எரிக்சன் நிறுவனத்தின் அறிவிப்பால், அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடர்ந்து, எரிக்சன் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்