விரைவில் திருமணம் செய்யும் பிரபாஸ்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் ‘பாகுபலி‘ படத்தில் நடித்தன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்‘ என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 16-ம் தேதி வெளிவர உள்ளது. ராமாயணத்தை தழுவி மோஷன் கேப்சரிங் முறையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது.

இந்தபடத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு நேற்று ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது. இந்த விழாவில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைப் அலிகான் தவிர மற்றவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பிரபாஸ், பேச ஆரம்பித்த பின் ரசிகர்கள் அவரிடம் திருமணம் பற்றி கூச்சல் எழுப்பி கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு சிரித்துக் கொண்டே ‘இங்கு திருப்பதியில் தான் எனது திருமணம் நடக்கும்‘ என பதிலளித்துள்ளார்.

‘பாகுபலி‘ படத்தில் நடித்த போது பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. அதன்பின் ‘ஆதிபுருஷ்‘ படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கும் கிரித்தி சனோன், பிரபாஸ் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் 43 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். நேற்றைய அறிவிப்பின் மூலம் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மணப்பெண் யார் என்பது தான் சஸ்பென்ஸாக உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்