நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ‘ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையில் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68-வது படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான போது நடிகை திரிஷா தான் மீண்டும் இவருக்கு ஜோடியாக நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், தற்போது பிரியா பவானி சங்கரை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இவர் தற்போது ராகவா லாரன்ஸ், சிம்பு, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.










