தமிழ் சினிமாவில் ‘இயற்கை‘ படம் மூலம் அறிமுகமாகி பிரபலமானவார் நடிகர் ஷாம். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். அதன் பின் இவர் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த நிலையில், அவ்வப்போது குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் எம்.ஆர்.பாரதி கணேஷ் இயக்கத்தில் மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கிறார். எம்.ஆர்.பாரதி கணேஷ், விஜயகாந்த், சிம்ரன் இணைந்து நடித்த ‘கண்ணுபட போகுதய்யா‘ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா இசையில், சிறுவர்களை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது.
இதில் ராதாரவி, சந்தான பாரதி, திருகுமரன், ஆஷிகா யாஷ், ஈஸ்வரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை பற்றி இயக்குனர் எம்.ஆர்.பாரதி கூறியதாவது, “ இன்றைய 5 ஜி ஜெனரேஷன் காலகட்டத்தில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை, அறிவு, ஆற்றல், செயல்பாடுகள் மற்றும் இன்றைய சமூக சூழ்நிலைகள், வாழ்வியலின் பார்வை பற்றிய உணர்வுப்பூர்வமான விஷயங்களை விளக்கும் படமாக உருவாகிறது.
சென்னை நகரில் நடக்கும் நல்ல கதையம்சத்துடன் தயாராகிறது “ என்று கூறியுள்ளார்.










