‘விஜய் 68-படத்தின் அப்டேட் இனி வெளிவராது‘ – இயக்குனர் வெங்கட் பிரபு அதிரடி

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ‘ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள 68-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் 68-ன் அறிவிப்பால் ‘லியோ‘ படத்திற்கு தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும் என்று விஜய் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்தனர்.

மேலும், சமீபத்தில் ‘லியோ‘ படத் தயாரிப்பாளர் லலித்குமார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, ‘வாரிசு‘ படம் வெளிவருவதற்கு முன்பே ‘லியோ‘ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்ததாகவும், ஆனால், ‘வாரிசு‘ படம் வெளிவரும் வரை ‘லியோ‘ படம் பற்றி நாங்கள் வெளியில் எதையும் அறிவிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று ‘ரெஜினா‘ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார். அவர் பேசும் போது ரசிகர்கள் ‘விஜய் 68‘ அப்டேட் என உரக்க சத்தமிட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “இனி விஜய் 68 அப்டேட் ‘லியோ‘ படம் வந்த பிறகு கொடுக்கலாம்.

அப்புறம் விஜய் சாரே திட்டுவாரு. ஏன்டா, நீ போய் எல்லா இடத்துலயும் அப்டேட் கொடுக்கறன்னு கேப்பாரு. அதனால, ‘லியோ‘ வந்த பிறகு ‘தளபதி 68‘ அப்டேட் “ எனக் கூறியுள்ளார். அதனால் இனிமேல் ‘லியோ‘ படம் அக்டோபர் 19-ம் தேதி வெளிவரும் வரை ‘விஜய் 68‘ படத்தின் அப்டேட் வெளிவர வாய்ப்பில்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்