தமிழில் ‘பாய்ஸ்‘ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதன்பின் தமிழில் சில படங்கள் நடித்தாலும் தெலுங்கில் ‘பொம்மரிலு‘ படத்தின் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்று அங்கு பிரபலமானார்.
அந்த படம்தான் தமிழில் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்‘ படமாக ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதரியும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளது. நடிகை அதிதி தமிழில் கார்த்திக் நடித்த ‘காற்று வெளியீடை‘ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும், தற்போது இருவரும் ஜோடியாக இருக்கும் சில புகைப்படங்களும் கூட வெளியாகின.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘மஹா சமுத்திரம்‘ படத்திலிருந்துதான் சித்தார்த், அதிதி இடையே காதல் மலர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
44 வயதான சித்தார்த் இதற்கு முன்பு திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் சில வருடங்களுக்கு முன்பு அவரும், நடிகை சமந்தாவும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தன.
அதன்பின் இருவரும் திடீரெனப் பிரிந்தார்கள். சித்தார்த் நடிப்பில் இந்த வாரம் ‘டக்கர்‘ படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. தெலுங்கில் அப்படத்திற்காக நிறைய புரமோஷன்களைச் செய்து வருகிறார் சித்தார்த். அப்போது அவரிடம் அதிதி பற்றி கேட்ட கேள்விக்கு, “சில விஷயங்கள் தனிப்பட்டதாக இருக்க வேண்டும்“ என்று பதிலளித்துள்ளார் நடிகர் சித்தார்த்.










