விஜய்யுடன் இணைந்து நடிக்கும் இயக்குனர் மிஷ்கின்

நடிகர் விஜய் ‘வாரிசு‘ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்தில் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இயக்குனர் மிஷ்கினும் விஜய் 67-வது படத்தில் தான் வில்லனாக நடித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் அவர் கூறுகையில், இப்போதுதான் விஜய்யின் 67-வது படத்தில் அவருடன் இணைந்து நடித்துவிட்டு வருகிறேன்.

நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த யூத் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதன் பின் இப்போது தான் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன் என்று விஜய் 67-வது படத்தில் தான் வில்லனாக நடிப்பதை உறுதிப்படுத்தினார். அதோடு, கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரும் இந்த விஜய் 67-வது படத்தின் 6 வில்லன்களில் ஒருவராக நடிப்பதாக மற்றொரு புதிய செய்தியும் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்