சினிமாவில் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை – பிரியா பவானி சங்கர் பேட்டி

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழில் ‘மேயாதமான்‘ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தற்போது அவர் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், தமிழை தாண்டி தெலுங்கிலும் கால்பதித்துள்ள இவர் ஒரு பேட்டியில் கூறுகையில், “யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. எதிர்காலத்தை பற்றி பெரிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தேன். ரசிகர்கள் ஏற்பார்களா, இல்லையா என்று யோசிக்கவில்லை. நடித்தால் பணம் வருகிறது என நினைத்து, நடித்தேன். சினிமா பின்னணி உள்ளவர்களே சினிமாவில் தங்களை நிரூபிக்க கஷ்டப்படுகிறார்கள். அவர்களை பார்க்கும்போது நான் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என நினைக்கிறேன்“ என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்