‘லியோ‘ படத்தின் புதிய அப்டேட்டை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘லியோ‘. இதில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான ‘நா ரெடி தான் வரவா‘ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் விஜய் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இன்று அனைத்து படப்பிடிப்பும் முடிந்தது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டரில், “ 6 மாதங்களில் 125 நாட்கள் படப்பிடிப்பு! இந்தப் படத்தில் தங்கள் ஆன்மாவை ஈடுபடுத்திக் கொண்ட நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. இந்தப் பயணம் மீண்டும் என் இதயத்துக்கும் தனிப்பட்ட வகையில் மிகவும் நெருக்கமானதாக இருந்தது“ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்