‘துருவ நட்சத்திரம்‘ படத்தின் புதிய அப்டேட் வெளியீடு – ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரம் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்‘. இப்படத்தை இயக்குர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ரீத்துவர்மா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இணைந்து ராதிகா சரத்குமார், பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் பணிகள் கடந்த 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.

இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ‘விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்‘ என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘துருவ நட்சத்திரம்‘ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 19-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்